/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைக் திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது
/
பைக் திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது
ADDED : நவ 21, 2024 12:29 AM

வானூர் : வானூர் அருகே வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்ட பைக்கை திருடிய வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
வானூர் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோடு ஜவகர் நகரை சேர்ந்தவர் முருகன், 43; இவர் கடந்த 4ம் தேதி தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்த யமாகா பைக்கை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுள்ளனர். அக்கம் பக்கத்தில் விசாரித்தில், இரு ஆசாமிகள், பைக்கை தள்ளி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து முருகன், ஆரோவில் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமிராவில் ஆய்வு செய்தனர்.
அதில் பதிவான அடையாளங்களை வைத்து, இடையஞ்சாவடி கிராமம் களத்துமேட்டு தெரு சேர்ந்த ஏழுமலை அருள்குமார், 21; என்பவரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவரும், திண்டிவனம் பெலாக்குப்பம் ரோடு பாரதிதாசன் பேட்டையை சேர்ந்த சூர்யா, 23; என்பவரும் சேர்ந்து திருடியதாக ஒப்புக்கொண்டார். அதன் பேரில், போலீசார் அவரை கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர்.
மேலும், தலைமறைவாக இருந்த சூர்யாவை போலீசார், கைது செய்து, முருகனின் பைக்கை பறிமுதல் செய்தனர்.

