/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீடு தோறும் நுாலகங்கள் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
/
வீடு தோறும் நுாலகங்கள் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
வீடு தோறும் நுாலகங்கள் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
வீடு தோறும் நுாலகங்கள் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : அக் 12, 2024 11:02 PM
விழுப்புரம் : வீடு தோறும் நுாலகங்கள் அமைத்து சிறப்பாக பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர்கள் பழனி, பிரசாந்த் செய்திக்குறிப்பு:
வீடு தோறும் நுாலகங்கள் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசு, மாவட்டம் தோறும் புத்தகத் திருவிழாக்களை நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடு தோறும் நுாலகங்கள் அமைத்துச் சிறப்பாகப் பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களைக் கண்டறிந்து, ஊக்குவித்து சொந்த நுாலகங்களுக்கு விருது என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி, பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் செயல்படுத்தி வரும் நுாலகங்களின் விபரங்கள், நுால்களின் எண்ணிக்கை, எந்த வகையான நுால்கள், தங்களிடமுள்ள அரியவகை நுால்கள், நுாலகம் எந்த ஆண்டு முதல் பராமரிக்கப்பட்டு வருகிறது, வாசிப்பு பழக்கத்தினை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் முயற்சி.
நுாலகத்தின் புகைப்படம் போன்றவற்றை வரும் 15ம் தேதிக்குள் 9952213939 என்ற மொபைல் எண்ணிலும், dlovilluppuram@gmail.com என்ற e-mail முகவரியிலும் தெரிவிக்க வேண்டும்.
மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படுத்தி வரும் தனிநபர் சொந்த நுாலகங்களுக்கு விருது வழங்கப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.