/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாற்றுத்திறனாளி கவுன்சிலர் நியமனம்
/
மாற்றுத்திறனாளி கவுன்சிலர் நியமனம்
ADDED : நவ 14, 2025 11:22 PM
மயிலம்: மயிலம் ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தில் மாற்றுத் திறனாளி கவுன்சிலர் பதவிக்கான நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மயிலம் ஒன்றிய கவுன்சிலர்களின் கூட்டத்திற்கு ஒன்றிய சேர்மன் யோகேஸ்வரி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், இளங்கோவன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மஸ்தான் மாற்றுத்திறனாளி கவுன்சிலர் ராதாவுக்கு நியமன ஆணையை வழங்கினார்.
நிகழ்ச்சியில், துணைச் சேர்மன் புனித ராமஜெயம், ஒன்றிய கவுன்சிலர்கள் கண்ணன், செல்வகுமார், கீதா, பரிதா, உமா, சாந்தகுமார், நிவேதா, கண்ணன், தனலட்சுமி, செல்வம், அஞ்சலாட்சி, கோமதி, கயல்விழி, சரசு, ராஜ்பரத், ஜெயந்தி, ஜமுனாராணி, வசந்தா, கலா, சுந்தரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், வளர்ச்சி பணிகள் குறித்து 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

