ADDED : ஜூலை 25, 2025 10:24 PM

வானுார்; சென்னை தொலை தொடர்பு கணக்கு பிரிவு ஓய்வு பெற்ற அதிகாரிகள் அறக்கட்டளை சார்பில், 6 பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
தைலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு, தலைமையாசிரியர் இளங்கோ வரவேற்றார். செங்கல்பட்டு துணை ஆட்சியர் நரேந்திரன், பேராசிரியர் கல்விமணி ஆகியோர் மாணவ, மாணவியர்களுக்கு பரிசு, கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசினர்.
அறக்கட்டளை செயலாளர் பாலசுப்ரமணியம், அறங்காவலர்கள் முனுசாமி, ராமகிருஷ்ணன் ஆகியோர் மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கினர்.
விழாவில், தைலாபுரம், கண்டமங்கலம், ஒலக்கூர், வீடூர், புளிச்சப்பள்ளம், திண்டிவனம் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 18 மாணவ, மாணவியர்கள் பரிசு பெற்றனர்.
மேலும், தாய், தந்தையை இழந்த வறுமைக்கோட்டின் கீழ் உள்ள 25 மாணவர்களுக்கு 1,500 ரூபாய் வீதம் நிதி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை, தைலாபுரம் பள்ளி வேதியியல் ஆசிரியர் ஜெகன்நாதன், ஆங்கில ஆசிரியர் செல்வம் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.