/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வானுார் அரசு கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டு
/
வானுார் அரசு கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : நவ 22, 2025 04:41 AM

வானுார்: மாவட்ட அளவில் நடந்த தமிழ்கனவு திட்ட விழாவில் பாராட்டு சான்றிதழ் பெற்ற மாணவர்களை வானுார் அரசு கலைக்கல் லுாரி முதல்வர் பாராட்டினார்.
தமிழக அரசு கல்லுாரி மாணவர்களுக்கு, 'தமிழ் கனவு' திட்டத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் தமிழ்மரபு, பண்பாடு, இலக்கியம் மற்றும் வரலாறு, இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மாணவர்களிடையே தமிழ் பாரம்பரியத்தின் செழுமையும், வேலை வாய்ப்புகளையும் இணைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்ட கல்லுாரி மாணவர்களுக்கு, 'தமிழ் கனவு' திட்ட விழா மயிலம் பொறியியல் கல்லுாரி வளாத்தில் நடந்தது. வணிகவியல் துறையைச் சேர்ந்த 50 மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில் வானுார் கல்லுாரியைச் சேர்ந்த மாணவர்கள் சிவப்பிரியன், ராம்குமார், கோபிகா, மேனகா ஆகியோரின் செயல் திட்டத்தை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.
சிறப்பாக செயல்பட்டு பாராட்டுச் சான்றிதழ் பெற்ற மாணவர்களை, வானுார் கல்லுாரி முதல்வர் வில்லியம் பாராட்டினார். மாணவர்களை வழிநடத்திச் சென்ற பேராசிரியர் பிரதாப், வணிகவியல் துறை தலைவர் தேவநாதன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

