/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
துாய இருதய கல்லுாரியில் கலை நிகழ்ச்சி போட்டி
/
துாய இருதய கல்லுாரியில் கலை நிகழ்ச்சி போட்டி
ADDED : செப் 24, 2025 06:24 AM

விழுப்புரம் : விக்கிரவாண்டி அடுத்த பேரணி துாய இருதய கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் துறைகளுக்கிடையான கலை நிகழ்ச்சி போட்டி நிறைவு விழா நடந்தது.
கல்லுாரி செயலாளர் பிரிட்டோ தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் டேவிட் சவுந்தர், கல்வியின் மேம்பாடு மற்றும் மாணவிகளின் தனித்திறமைகள் குறித்து பேசினார். பவுலின் மேரி வாழ்த்தி பேசினார்.
கடலுார் பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். இதில், கடந்த 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்கள் நடந்த கலை நிகழ்ச்சி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிகளில் ஒட்டுமொத்த வெற்றிக் கோப்பையை வீனஸ் குழு வென்றது .
அனைத்து துறை பேராசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.