/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
4 இடங்களில் மீன் வியாபாரிகளை தாக்கி பணம், மொபைல் பறிப்பு; விக்கிரவாண்டி அருகே முகமூடி நபர்கள் துணிகரம்
/
4 இடங்களில் மீன் வியாபாரிகளை தாக்கி பணம், மொபைல் பறிப்பு; விக்கிரவாண்டி அருகே முகமூடி நபர்கள் துணிகரம்
4 இடங்களில் மீன் வியாபாரிகளை தாக்கி பணம், மொபைல் பறிப்பு; விக்கிரவாண்டி அருகே முகமூடி நபர்கள் துணிகரம்
4 இடங்களில் மீன் வியாபாரிகளை தாக்கி பணம், மொபைல் பறிப்பு; விக்கிரவாண்டி அருகே முகமூடி நபர்கள் துணிகரம்
ADDED : அக் 09, 2024 06:46 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி மற்றும் விழுப்புரம் அருகே அடுத்தடுத்து 4 மீன் வியாபாரிகளைத் தாக்கி பணம், மொபைல் போன்களை பறித்துச் சென்ற முகமூடி நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த ஒரத்துாரைச் சேர்ந்தவர் துரை, 35; மீன் வியாபாரி. இவர், நேற்று அதிகாலை 2:00 மணியளவில் வியாபாரத்திற்கு மீன் வாங்க பைக்கில் சென்றார்.
பனையபுரம் சென்றபோது, பின் தொடர்ந்து பைக்கில் வந்த முகமூடி அணிந்த 3 பேர் வழிமறித்து, கத்தியால் துரையின் கையை கிழித்து அவரிடமிருந்த 2,000 ரூபாய் மற்றும் மொபைல் போன் ஆகியவற்றை பறித்துச் சென்றனர்.
மேலும் இருவரிடம் வழிப்பறி
அதே போல, ராதாபுரத்தைச் சேர்ந்த மீன் வியாபாரி குமார்,38; என்பவரை நேற்று அதிகாலை 3:00 மணியளவில் கப்பியாம்புலியூர் மேம்பாலம் அருகே முகமூடி அணிந்த 3 பேர், கத்தியால் தாக்கி, 3,000 ரூபாய், மொபைல் போனை பறித்துச் சென்றனர்.
மேலும், ராதாபுரத்தைச் சேர்ந்தவர் மீன் வியாபாரி முனுசாமி, 40; என்பவரிடமும் நேற்று அதிகாலை 3:30 மணியளவில் மேல்பாதி சமத்துவபுரம் அருகே முகமூடி அணிந்த 3 பேர் தாக்கி, 3,000 ரூபாய் மற்றும் மொபைல் போனை பறித்துச் சென்றனர்.
தகவலறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து முகமூடி ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
விழுப்புரம்
விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரத்தைச் சேர்ந்தவர் முனுசாமி, 50; மீன் வியாபாரி. இவர், அனிச்சம்பாளையம் சாலையில் உள்ள மொத்த மீன் மார்கெட்டில் மீன் வாங்குவதற்காக, நேற்று அதிகாலை 2:00 மணிக்கு மொபட்டில் சென்றார்.
மேல்பாதி கிராமம் அருகே பல்சர் பைக்கில் வந்த முகமுடி அணிந்த 3 பேர் முனுசாமியை வழிமறித்து கத்தியால் தாக்கி, 5,800 ரூபாய் மற்றும் மொபைல் போனை பறித்துச் சென்றனர்.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.