/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு மருத்துவக் கல்லுாரியில் விருது வழங்கும் விழா
/
அரசு மருத்துவக் கல்லுாரியில் விருது வழங்கும் விழா
ADDED : ஆக 24, 2025 03:29 AM

விக்கிரவாண்டி: விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரியில் பொது அறுவை சிகிச்சை திறனாய்வில் வெற்றி பெற்ற முதுகலை மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரியில் நடந்த விழாவில், கல்லுாரி டீன் லுாஸி நிர்மல் மடோனா தலைமை தாங்கினார்.
ஆர்.எம்.ஓ., ரவிக்குமார், துணை முதல்வர் தாரணி, மருத்துவ கண்காணிப்பாளர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அறுவை சிகிச்சை துறை தலைவர் கணேஷ் குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சூர்யா கல்வி குழும நிர்வாகி விசாலாட்சி பொன்முடி பங்கேற்று திறனாய்வு போட்டியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு டாக்டர் தியாகராஜன் நினைவு பரிசாக தங்க பதக்கம் மற்றும் சான்றுகளை வழங்கினார்.
தமிழகத்தின் பல்வேறு மருத்துவ கல்லுாரியில் பயிலும் முதுகலை மாணவர்கள் திறனாய்வு போட்டியில் பங்கேற்றனர். டாக்டர்கள் சுரேஷ்குமார் மற்றும் ஆத்மலிங்கம் நினைவாக பரிசுகள் வழங்கப்பட்டன. மரகதம் மருத்துவ மனை நிர்வாக இயக்குனர் திலீபன்,டாக்டர்கள் ராஜபாண்டி ,பார்த்தசாரதி, உதவி பேராசிரியர் சவுந்தர்ராஜன் உட்பட பல்வேறு மருத்துவக் கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.