ADDED : மே 01, 2025 05:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட போலீஸ் சார்பில், கஞ்சனூர், கெடார் பகுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பைக் பேரணி நடந்தது.
சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்த போலீசாரின் விழிப்புணர்வு பேரணி நேமூரில் தொடங்கி கஞ்சனூர், அசோகபுரி, தும்பூர், சூரப்பட்டு வழியாக கெடார் வரை 20 கி.மீ., சென்றது.
பைக் பேரணியில் பங்கேற்ற போலீசார், சாலையில் ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
விழிப்புணர்வு துண்டு பிரசுரமும் வழங்கினர்.