/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கலப்பிடமில்லா தர்பூசணி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
கலப்பிடமில்லா தர்பூசணி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
கலப்பிடமில்லா தர்பூசணி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
கலப்பிடமில்லா தர்பூசணி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஏப் 11, 2025 06:31 AM

திண்டிவனம்: திண்டிவனத்தில் தர்பூசணி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மேம்பாலத்தின் கீழ் பஸ் நிறுத்தத்தில் தமிழ்நாடு அரசு வேளாண் வணிக துறை தோட்டக்கலைத்துறை, திண்டிவனம் சர்வீஸ் லயன்ஸ் சங்கம், லயன்ஸ் சர்வீஸ் ட்ரஸ்ட் ஹோட்டல், ஓட்டல் ஆர்யாஸ் இணைந்து கலப்படமில்லா தர்பூசணி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
வேளாண் உதவி இயக்குனர் சரவணன் தலைமை தாங்கினார். திண்டிவனம் சர்வீஸ் லயன்ஸ் டிரஸ்ட் ஸ்மைல் ஆனந்த், முத்து ராஜ்குமார் முன்னிலை வகித்தனர்.தோட்டக்கலை துறை துணை இயக்குனர் அன்பழகன், கலப்படமில்லா தர்பூசணி விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார்.
இதில் சர்வீஸ் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் சின்னராசு, கலைமணி, குமார் ,கருப்பையா, தோட்டக்கலைத்துறை கார்ல் மார்க்ஸ், இளவரசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் 500 பேருக்கு தர்ப்பூசணி, பழம் மற்றும் பழச்சாறு வழங்கப்பட்டது.