ADDED : நவ 04, 2026 03:29 PM

அ நிறம் | அளவு
திண்டிவனம்: நெடி கிராமத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
திண்டிவனம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சார்பில், நெடி, மொழியனுார் ஆகிய கிராமங்களில் உள்ள பொது மக்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுனில்குமார், சப் இன்ஸ்பெக்டர் தேசி ஆகியோர் கிராமத்திலுள்ள ரயில்வே கேட்டை கால்நடைகளுடன் கடக்கும் போது கவனமாக செல்ல வேண்டும்.
ரயில்கள் வரும் போது தண்டவளாத்தை கால்நடைகளுடன் கடக்க கூடாது, பொது மக்களும் வாகனங்களுடன் செல்லும் போது கவனமாக கடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
