ADDED : ஜூலை 14, 2025 03:57 AM

அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அடுத்த வளத்தியில் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துகோன் குரு பூஜை விழா நடந்தது.
ஒன்றிய சேர்மன் கண்மணி தலைமை தாங்கினார். கவுன்சிலர் நெடுஞ்செழியன் வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., வீரர் அழகு முத்துகோன் படத்தை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு உணவு வழங்கினார்.
மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி, செல்வி ராமசரவணன், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
திண்டிவனம்
திண்டிவனம் மேம்பால பஸ் நிலையத்தின் கீழ் யாதவ நலச்சங்கம் சார்பில் நடந்த விழாவில், அழகு முத்துகோன் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில், சங்க நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், பொன்னரசு, கார்த்திகேயன், கமலக்கண்ணன், அரிகிருஷ்ணன், சரத்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழுப்புரம்
விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில், மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பொன்முடி, லட்சுமணன் எம்.எல்.ஏ., மற்றும் முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ், தி.மு.க., தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி, அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தி.மு.க., நகர செயலாளர் சக்கரை, நகர மன்ற தலைவர் தமிழ்செல்வி பிரபு, மாவட்ட துணைத் தலைவர்கள் வேலப்பன், அன்பரசன், எத்துராஜ், நகர செயலாளர் அருள் உட்பட பலர் பங்கேற்றனர்.