/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பூமாலை வணிக வளாக கடைகள் மகளிர் குழுவினர் விண்ணப்பிக்கலாம்
/
பூமாலை வணிக வளாக கடைகள் மகளிர் குழுவினர் விண்ணப்பிக்கலாம்
பூமாலை வணிக வளாக கடைகள் மகளிர் குழுவினர் விண்ணப்பிக்கலாம்
பூமாலை வணிக வளாக கடைகள் மகளிர் குழுவினர் விண்ணப்பிக்கலாம்
ADDED : அக் 14, 2024 03:58 AM
விழுப்புரம் : விழுப்புரம் பூமாலை வணிக வளாக கடைகள் தகுதி வாய்ந்த மகளிர் குழுக்களுக்கு வாடகைக்கு வழங்கப்பட உள்ளது.
கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே பூமாலை வணிக வளாகம் துவக்கி வைக்கப்பட்டு, மாதாந்திர மற்றும் 6 மாத வாடகை அடிப்படையில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது, சுழற்சி முறையில், பூமாலை வணிக வளாக கடைகள் தகுதி வாய்ந்த குழுக்களுக்கு வாடகைக்கு வழங்கப்பட உள்ளது.
விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்களுக்கு அருகாமையிலுள்ள, வட்டார திட்ட மேலாளர் அல்லது மாவட்ட மகளிர் திட்ட அலகு விற்பனை சங்க அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
எனவே, மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுக்கள், இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.