
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; விழுப்புரத்தில் நடந்த ரத்ததான முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் அரசு பொறியியல் கல்லுாரியில், செஞ்சுருள் சங்கம் சார்பில், ரத்த தான முகாம் மற்றும் போதை பொருள் ஒழிப்பு, தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் செந்தில் தலைமை வகித்தார்.
இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி தலைவர் திருமாவளவன் துவக்கி வைத்தார். விழுப்புரம் அரசு மருத்துவ கல்லுாரி டாக்டர் விஜயா தலைமையிலான மருத்துவ குழுவினர் ரத்த தானத்தை பெற்றனர்.
முகாமில் 85 மாணவ, மாணவியர் ரத்த தானம் வழங்கினர். செஞ்சுருள் சங்க அலுவலர் பழனி ஒருங்கிணைத்தார்.
தொடர்ந்து இந்திய செஞ்சுருள் சங்கம் சார்பில், போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு, தற்கொலை தடுப்பு குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.