ADDED : அக் 08, 2025 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி; கணவரிடம் ஏற்பட்ட தகராறில் மனைவி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செஞ்சி அடுத்த மல்லாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ். கொத்தனார். இவரது மனைவி அழகேஸ்வரி, 36; திருமணமாகி 12 ஆண்டுகளாகிறது. 2 பிள்ளைகள் உள்ளனர். சத்யராஜிக்கு குடிப்பழக்கம் இருந்ததால் மனைவியிடம் தினமும் தகராறு ஏற்பட்டது.
மேலும், சத்யராஜ் நடத்தை மீது அழகேஸ்வரிக்கு சந்தேகம் ஏற்பட்டது.
கடந்த 5ம் தேதி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அழகேஸ்வரி மின் விசிறியில் துாக்கு போட்டுக் கொண்டார். உடன், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார்.
சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.