ADDED : ஏப் 04, 2025 04:25 AM

விழுப்புரம்: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி, அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் கூட்டமைப்பு (போட்டா- ஜியோ) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட முதன்மை ஒருங்கிணைப்பாளர் சடகோபன் தலைமை தாங்கினார். மகளிர் ஒருங்கிணைப்பாளர் மஞ்சுளா வரவேற்றார்.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், தமிழ்நாடு ஆசிரியர் கழகம் செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்கம் மாநில தலைவர் ஞானசுந்தர், மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் பன்னீர்செல்வம்.
முன்னாள் மாநில துணை பொது செயலாளர் கார்மேகவண்ணன், தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் குமார் ஆகியோர் கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அரசு ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். தலைமை செயலகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உள்ள பல பிரிவு காலி பணியிடங்களை நிரப்பி, பதவி உயர்வு வழங்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
திண்டிவனம் வட்டார கிளை தலைவர் அருள்பிரகாஷ் நன்றி கூறினார்.