/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
2 கடைகளில் கேமரா திருட்டு வானுார் அருகே துணிகரம்
/
2 கடைகளில் கேமரா திருட்டு வானுார் அருகே துணிகரம்
ADDED : பிப் 02, 2025 04:24 AM
வானுார் : வானுார் அருகே 2 கடைகளில் சி.சி.டி.வி.,கேமராக்கள் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம், ஜவகர் நகரைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன், 60; திருச்சிற்றம்பலம் கூட்ரோடு நான்குமுனை சந்திப்பில், மயிலம் செல்லும் சாலையில் ஜென்ரல் ஸ்டோர் நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு வழக்கம் போல் கடையை பூட்டிச் சென்றார். நேற்று காலை 4:00 மணிக்கு கடையை மீண்டும் திறக்க வந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது, குளிர்சாதன பெட்டியை உடைத்து, 2,500 ரூபாய் மதிப்புள்ள குளிர்பானங்கள், சாக்லெட், கடையில் பொருத்தப்பட்டிருந்த 25,000 ரூபாய் மதிப்புள்ள சி.சி.டி.வி., கேமராவும், அருகில் உள்ள மொபைல் போன் கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., கேமராவையும் மர்ம நபர் திருடிச் சென்றது தெரிந்தது.
இதுகுறித்து ஜனார்த்தனன் அளித்த புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்தனர்.
இதில், அதிகாலை 1:30 மணிக்கு, மர்ம நபர் கைலியால் முகத்தை மூடிக்கொண்டு, திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.
போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.