நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் நகரில் ரோந்து சென்றனர். அப்போது, வண்டிமேடு ஏரிக்கரை பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை சோதனை செய்ததில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவர் அதே பகுதியை சேர்ந்த தனசேகரன் மகன் கிருஷ்ணராஜ், 28; என்பதும், அவருடன், மற்றொரு நபரும் கஞ்சா வாங்கி வந்து விற்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து, இருவர் மீதும், வழக்குப் பதிந்து, கிருஷ்ணராஜை கைது செய்து, 60 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.