/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பட்டாசு வெடித்த தகராறு 4 பேர் மீது வழக்கு
/
பட்டாசு வெடித்த தகராறு 4 பேர் மீது வழக்கு
ADDED : நவ 06, 2024 05:39 AM
வானுார்,: பட்டாசு வெடித்த தகராறில் இருவரைத் தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கிளியனுார் இந்திரா நகரைச் சேர்ந்தவர் ரஜினி மகன் மேகவர்மன், 22; தேற்குணம் மாதாகோவில் தெருவைச் சேர்ந்தவர் வின்சன் மகன் அருள்குமார், 19; நண்பர்கள். இருவரும், சக நண்பர்களுடன், கடந்த 3ம் தேதி பட்டாசு வெடித்த போது அதே பகுதியைச் சேர்ந்த ஜெயசங்கர் மகன் வீரவளன், 23; முருகதாஸ் மகன் பிரவீன், 24; கண்ணன் மகன் கணேஷ், 26; ரமேஷ் மகன் அகத்தீஸ்வரன், 23; ஆகியோருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் அன்று இரவு 10:30 மணியளவில் மீண்டும் தகராறு ஏற்பட்டதில், மேகவர்மன், அருள்குமார் ஆகிய இருவரும் தாக்கப்பட்டு படுகாயமடைந்தனர்.
இது குறித்து மேகவர்மன், கிளியனூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார், நேற்று முன்தினம் வீரவளன், பிரவீன், கணேஷ், அகதீஸ்வரன், ஆகிய 4 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.