UPDATED : அக் 21, 2026 12:37 AM
ADDED : அக் 21, 2026 12:34 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரத்தில் அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் வைத்த பா.ம.க., பிரமுகர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் தாலுகா சப்–இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று சாலாமேடு பகுதியில் ரோந்து சென்றனர்.
அங்கு, அரசு அனுமதியின்றி இரு கட்சி பேனர்களை வைத்திருந்த பா.ம.க., நகர இளைஞரணி துணை செயலாளர் அருண்,25; என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
