/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மணல் கடத்திய வாலிபர் மீது வழக்கு
/
மணல் கடத்திய வாலிபர் மீது வழக்கு
ADDED : செப் 22, 2024 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: காணை அருகே லாரியில் மணல் கடத்திய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
காணை சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் லட்சுமிபுரம் கிராமத்தில் உள்ள கூட்ரோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்தவழியாக வந்த லாரியை போலீசார் சோதனை செய்ததில், மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
லாரியை போலீசார் பறிமுதல் செய்து, மணல் கடத்திய மேலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார், 23; என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.