/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செக்யூரிட்டியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
/
செக்யூரிட்டியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
ADDED : ஏப் 27, 2025 04:38 AM
கோட்டக்குப்பம் : கோட்டக்குப்பம் அருகே தனியார் கெஸ்ட் அவுஸ் செக்யூரிட்டியை தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கோட்டக்குப்பம் அடுத்த சின்ன முதலியார்சாவடி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணி, 40; பெரிய முதலியார்சாவடியில் உள்ள தனியார் பீச் ரிசார்ட்டில் செக்யூரிட்டியாக வேலை செய்கிறார்.
இவர், நேற்று முன்தினம் பணியில் இருந்தபோது, பக்கத்து கெஸ்ட் அவுசில் இருந்து மதுபாட்டில்கள் வீசப்பட்டது. இதை சுப்ரமணியன் தட்டி கேட்டபோது, அங்கு வேலை செய்யும் பிரபாகர், 30; கரிகாலன், 30; ஆகியோர் சுப்ரமணியனை தாக்கினர்.
புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீசார், பிரபாகர், கரிகாலன் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.