/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தம்பதியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
/
தம்பதியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
ADDED : டிச 08, 2025 06:33 AM
விழுப்புரம்: கிளியனுார் அருகே நிலப் பிரச்னையில் தம்பதியை தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கிளியனுார் அடுத்த புதுகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் புருஷோத்தமன், 35; அதே பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன்கள் நாராயணசாமி, 50; சபரி, 45; இவர்களுக்கிடையே நிலம் தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது.
கடந்த 5ம் தேதி இந்த வழக்கு சம்பந்தமாக நீதிமன்றம் சென்ற புருஷோத்தமன் வீட்டிற்கு வந்தார். வீட்டின் அருகே வந்த போது, அவரை, நாராயணசாமி, சபரி ஆகியோர் திட்டி தாக்கினர். தடுத்த புருஷோத்தமன் மனைவி விஜயசாந்தியையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
புகாரின் பேரில், நாராயணசாமி, சபரி ஆகியோர் மீது கிளியனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

