/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்ட செயற்குழு கூட்டம் எம்.எல்.ஏ., அழைப்பு
/
மாவட்ட செயற்குழு கூட்டம் எம்.எல்.ஏ., அழைப்பு
ADDED : டிச 08, 2025 06:34 AM
செஞ்சி: செஞ்சியில் இன்று நடக்கும் தி.மு.க., மாவட்ட செயற்குழு ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பேச இருப்பதால் நிர்வாகிகள் பங்ஙேகற்க மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் செயற்குழு ஆலோசனைக் கூட்டம் இன்று 8ம் தேதி காலை 10:00 மணிக்கு செஞ்சி தமிழ் திருமகள் திருமண மண்டபத்தில் மாவட்ட அவைத்தலைவர் சேகர் தலைமையில் நடக்க உள்ளது.
கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சியில் நிர்வாகிகளிடம் பேச உள்ளார். எனவே கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள் உட்பட அனைத்து நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

