/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குடிபோதையில் தகராறு 4 பேர் மீது வழக்கு
/
குடிபோதையில் தகராறு 4 பேர் மீது வழக்கு
ADDED : நவ 11, 2025 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: வானுார் ஏரியில் மது அ ருந்திய போது, ஏற்பட்ட தகராறில் 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
வானுார் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர்கள் கோமேதகன், 20; சிலம்பரசன், 20; இருவரும் வானுார் பெரிய ஏரிக்கரையில் மது அருந்தினர்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வானுார் பச்சை வாழியம்மன் நகரைச் சேர்ந்த சூர்யா, 19; மற்றும் அவருடைய நண்பரான சின்ன பாபுசமுத்திரத்தைச் சேர்ந்த சுரேந்தர், 22; ஆகியோருக்குமிடையே தகராறு ஏற்பட்டு, தாக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில், 4 பேர் மீதும் வானுார் போலீசார் வழக்குப் பதிந்தனர்.

