/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு
/
மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு
ADDED : ஆக 28, 2025 11:56 PM
விழுப்புரம்: மனைவியை தாக்கிய கணவர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
விழுப்புரம் அடுத்த பிடாரிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தபாபு, 34; சென்னை தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஆஷா, 26; என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ள ஆஷாவை, ஆனந்தபாபு திட்டி தாக்கினார். தடுக்க முயன்ற ஆஷாவின் தாய் கலைச்செல்வி, தங்கை ஷர்மிளா ஆகியோரையும் ஆனந்தபாபு திட்டி மிரட்டினார்.
விழுப்புரம் தாலுகா போலீசார், ஆனந்தபாபு மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.