/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மத்திய மாவட்ட தி.மு.க., இளைஞரணி செயற்குழு
/
மத்திய மாவட்ட தி.மு.க., இளைஞரணி செயற்குழு
ADDED : டிச 11, 2025 05:43 AM

விழுப்புரம்: திருவண்ணாமலையில் வரும் 14ம் தேதி நடக்கும் தி.மு.க., வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு தொடர்பான விழுப்புரம் மத்திய மாவட்ட இளைஞரணி சார்பில் செயற்குழு கூட்டம் நடந்தது.
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்த கூட்டத்திற்கு, மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, ஆலோசனை வழங்கினார். அவர் பேசுகையில், சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே இருப்பதால், அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும். தேர்தல் பணிகளை தற்போதே துவங்கி, தி.மு.க., அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.
விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் ஓட்டுச்சாடிகள்தோறும் முதல்வர் துவக்கி வைத்த என் ஓட்டுச்சாவடி, வெற்றி ஓட்டுச்சாவடி பரப்புரை கூட்டத்தை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும். திருவண்ணாமலையில் நடக்கும் வடக்கு மண்டல இளைஞரணி ஆலோசனைக்கூட்டத்தில், அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும் என்றார்.
அப்போது, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் கண்ணப்பன், முன்னாள் எம்.எல்.ஏ., மாரிமுத்து, பிரேமா குப்புசாமி, ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, பிரபாகரன், முருகவேல், சந்திரசேகர், ராஜா, மைதிலி ராஜேந்திரன், பேரூராட்சி செயலாளர் ஜீவா, நகர பொறுப்பாளர் வெற்றிவேல், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

