/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மத்திய அரசின் திட்டங்கள் : விழிப்புணர்வு முகாம்
/
மத்திய அரசின் திட்டங்கள் : விழிப்புணர்வு முகாம்
ADDED : அக் 29, 2025 11:34 PM

திண்டிவனம்: திண்டிவனத்தில் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சக மக்கள் தொடர்பு மண்டல அலுவலகம் சார்பில், ஊட்டச்சத்து திட்டம், துாய்மை பாரத இயக்கம், சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா மற்றும் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று துவங்கியது.
சந்தைமேடு தனியார் மண்டபத்தில் நடந்த முகாமில், மத்திய கள விளம்பரத்துறை உதவி அலுவலர் வீரமணி வரவேற்றார்.
மத்திய மக்கள் தொடர்புத்துறை மண்டல துணை இயக்குநர் பால நாகேந்திரன், திண்டிவனம் அஞ்சல் துறை உதவி கண்காணிப்பாளர் ராம்நாராயணன், விழுப்புரம் குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் மனோசித்ரா முன்னிலை வகித்தனர்.
மத்திய மக்கள் தொடர்புத்துறை தமிழகம்-புதுச்சேரி மண்டல இயக்குநர் காமராஜ் தலைமை வகித்து, மத்திய அரசின் திட்டங்கள் குறித்து அவர் விளக்கினார்.
ரவிக்குமார் எம்.பி., திண்டிவனம் சப் கலெக்டர் ஆகாஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, முகாமை துவக்கி வைத்து பேசினர்.
இந்த முகாமில், மத்திய அரசின் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி, மத்திய அரசு துறைகளின் அரங்குகள், ஆதார் சேவை மையம் போன்றவை இடம் பெற்றுள்ளன.
தொடர் கருத்தரங்குகள், மாணவர்களுக்கான விழிப்புணர்வு போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த முகாம் நாளை நிறைவு பெறுகிறது.
கள விளம்பரத்துறை உதவி அலுவலர் வேல்முருகன் தொகுத்து வழங்கினார். உதவி அலுவலர் ஜெயகணேஷ் நன்றி கூறினார்.

