/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் போராட்டம்
/
ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் போராட்டம்
ADDED : அக் 29, 2025 11:35 PM

விழுப்புரம்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின், கூட்டமைப்பு சார்பில் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த போராட்டத்திற்கு, மாவட்ட தலைவர் நீலமேகம் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் கவிச்செல்வன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இதில், துாய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை ரூ.18 ஆயிரமாக உயர்த்தி ஊராட்சி மூலம் வழங்க வேண்டும்; மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களின் பணிக்காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு காலமுறை ஊதியம் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும்; என்பன உள்ளிட்ட, 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது, மாநில இணைச்செயலாளர் நேரு, மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன், பொருளாளர் ரங்கநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் ஊராட்சி செயலாளர்கள், துாய்மை காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

