UPDATED : அக் 22, 2026 04:58 PM
ADDED : அக் 22, 2026 04:56 PM

கண்டாச்சிபுரம்: விழுப்புரம் அருகே, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சி.இ.ஓ., ஆய்வு மேற்கொண்டார்.
கண்டாச்சிபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சி.இ.ஓ., பாலமுரளி ஆய்வு செய்து, காலாண்டு தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறித்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து பொதுத்தேர்வில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெறுவதற்கு தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் மாவட்ட அளவில் ஜே.ஆர்.சி முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கியும், மாநில விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.இதில் தலைமை ஆசிரியர் ஜெயசீலன்,உடற்கல்வி இயக்குனர் சுரேஷ், கணினி ஆசிரியர் குரு, முதுகலை ஆசிரியர் வெங்கடேசன் ஜே.ஆர்.சி., ஒருங்கிணைப்பாளர் கணபதி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
