/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் மாவட்டத்திற்கு முதல்வர் வருகை; கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்

ADDED : நவ 18, 2024 11:06 PM
விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில், வரும் 28, 29ம் தேதி நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் வருகை தருகிறார். அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார். முதல்வர் வருகையொட்டி, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். முதல்வர் வாகன வழித்தடங்களில் பாதுகாப்பு வசதிகள், மருத்துவ சேவை வசதி, மிக முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு வசதிகள்.
திறப்பு விழா செய்யப்படவுள்ள பணிகளின் திட்ட விவரங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ள பயனாளிகளின் விவரம். அரசின் சாதனை விவரங்கள், விழாமேடை அமைக்கும் பணிகளை தயார் செய்து, துறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, டி.ஆர்.ஓ., முருகேசன், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா, சப் கலெக்டர் (பயிற்சி) பிரேமி உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.