/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பாராட்டு
/
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பாராட்டு
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பாராட்டு
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பாராட்டு
ADDED : செப் 18, 2025 03:45 AM

விழுப்புரம்: மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பதக்கம் வழங்கி பாராட்டினார்.
விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஆக.26ம் தேதி தொடங்கி கடந்த 10ம் தேதி வரை நடந்தது.
மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடந்த போட்டியில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுப்பிரிவு ஆண்கள், பெண்கள், அரசு ஊழியர்கள் ஆண்கள், பெண்கள், மாற்றுதிறனாளிகள் என 5 பிரிவுகளில் 16 வகையான விளையாட்டுப் போட்டிகளை நடத்தினர்.
கபடி, கையுந்துபந்து, கால்பந்து, கைப்பந்து, தடகளம், நீச்சல், செஸ், கேரம், இறகுப்பந்து, பூப்பந்து, கோ-கோ, கிரிக்கெட், கூடைப்பந்து, சிலம்பம், வலை கோல்ப்பந்து போன்ற விளையாட்டுகளில், ஏராளமான வீரர்கள், வீராங்கனையர் கலந்துகொண்டனர். போட்டிகளின் நிறைவாக வெற்றிபெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு ஒவ்வொரு பிரிவுக்கும் முதலிடத்திற்கு, ரூ.3 ஆயிரம்; இரண்டாமிடம், ரூ.2 ஆயிரம்; மூன்றாமிடம், ஆயிரம் ரூபாய் என பரிசு தொகை வழங்கப்பட்டது.
வெற்றிபெற்ற வீரர்கள், வீராங்கனையருக்கு கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.