/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோவிந்தசாமி நினைவு மண்டபம் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
/
கோவிந்தசாமி நினைவு மண்டபம் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
கோவிந்தசாமி நினைவு மண்டபம் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
கோவிந்தசாமி நினைவு மண்டபம் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
ADDED : அக் 21, 2024 10:58 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில், முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி நினைவு மண்டப பணிகளை, கலெக்டர் பழனி ஆய்வு செய்தார்.
விழுப்புரம் வழுதரெட்டில், 2.8 ஏக்கர் பரப்பளவில், ரூ. 4 கோடி மதிப்பீட்டில், முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி நினைவு மண்டபம், ரூ.5.70 கோடி மதிப்பீட்டில் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 சமூக போராளிகளுக்கு மணி மண்டபம் அமைக்கப்படுகிறது.
இங்கு முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி மற்றும் சமூக போராளிகளுக்கு உருவச்சிலைகள், நுாலகம், பராமரிப்பாளர் அறை உள்ளிட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை கலெக்டர் பழனி நேற்று நேரில் பார்வையிட்டு, விரைந்து முடிக்குமாறு அலுவலர்களிடம் தெரிவித்தார்.
ஆய்வின்போது, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பாலாஜி மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.