/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புறவழிச்சாலையில் மேம்பாலம் கட்டுவதற்கான இடம்: கலெக்டர் ஆய்வு
/
புறவழிச்சாலையில் மேம்பாலம் கட்டுவதற்கான இடம்: கலெக்டர் ஆய்வு
புறவழிச்சாலையில் மேம்பாலம் கட்டுவதற்கான இடம்: கலெக்டர் ஆய்வு
புறவழிச்சாலையில் மேம்பாலம் கட்டுவதற்கான இடம்: கலெக்டர் ஆய்வு
ADDED : மார் 18, 2025 10:43 PM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ,முண்டியம்பாக்கம் பகுதியில் புறவழிச்சாலையில் மேம்பாலம் கட்டும் பணி துவங்கவுள்ள இடங்களை கலெக்டர் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.
விக்கிரவாண்டி வடக்கு பைபாஸ் முனை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி எதிரில் என 2 இடங்களில் மேம்பாலம் கட்டுமானப்பணி துவங்கப்பட உள்ளது.
இதையடுத்து 2 இடங்களிலும் வாகன போக்குவரத்தை திருப்பி விட சர்வீஸ் சாலைகள் அமைக்கும் பணி 95 சதவீதம் முடிந்துள்ளது.
இந்நிலையில், நேற்று கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் மேம்பாலம் அமைய உள்ள இடங்களையும் பார்வையிட்டு, பணி நடைபெறும் சமயங்களில் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து நகாய் திட்ட இயக்குனர் வரதராஜனிடம் ஆலோசனை நடத்தினார்.
பின், விக்கிரவாண்டியில் செயல்படும் முதல்வர் மருந்தகத்தை பார்வையிட்டு விற்பனையாளரிடம் தேவையான மருந்துகள் இருப்பில் உள்ளதா என கேட்டறிந்தார்.
நகாய் பொறியாளர் செல்வராஜ், டோல் கேட் திட்ட மேலாளர் சதீஷ் குமார், பி.ஆர்.ஓ., தண்டபாணி, பாதுகாப்பு மேலாளர் மனோஜ்குமார், பேரூராட்சி இளநிலை உதவியாளர் ராஜேஷ், மருந்தக விற்பனையாளர் வினாயக முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.