/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பஞ்., தலைவர் பதவி நீக்கம் கலெக்டர் அதிரடி உத்தரவு
/
பஞ்., தலைவர் பதவி நீக்கம் கலெக்டர் அதிரடி உத்தரவு
பஞ்., தலைவர் பதவி நீக்கம் கலெக்டர் அதிரடி உத்தரவு
பஞ்., தலைவர் பதவி நீக்கம் கலெக்டர் அதிரடி உத்தரவு
ADDED : ஜன 03, 2026 05:13 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே விதிமுறை மீறலில் ஈடுபட்ட ஊராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் அடுத்த பஞ்சமாதேவி ஊராட்சி தலைவர் செல்வம். இவர், ஊராட்சி ஆவணங்களில் வார்டு உறுப்பினர்களின் ஒப்புதல் இன்றி திருத்தம் செய்து விதிமீறலில் ஈடுபட்டதாக தமிழக ஊராட்சிகள் சட்டத்தின்படி பதவி நீக்கம் செய்து கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார். இதற்கான நகல் ஊராட்சி தலைவர் செல்வத்திடம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த நகலில், செல்வத்தை பதவி நீக்கம் செய்து தமிழக அரசிதழில் கடந்த டிசம்பர் 24ம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரசிதழில் வெளியிடப்பட்ட நாள் முதல் பதவி நீக்கம் அமலுக்கு வரும். செல்வம் தன்வசம் உள்ள ஊராட்சி தொடர்பான ஆவணங்களை, ஊராட்சி துணை தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஊராட்சி துணை தலைவருக்கு, ஊராட்சி தலைவரின் பொறுப்புகளை வழங்கியும், காசோலை மற்றும் இணையவழி ஒப்புதலில் இணை கையெப்பமிட கண்டமங்கலம் பி.டி.ஓ.,விற்கு தற்காலிக அனுமதி வழங்கி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு பொறுப்பு ஊராட்சி தலைவருடன் இணை கையொப்பமிட ஒரு உறுப்பினரை பஞ்சாதேவி ஊராட்சி மன்றத்தால் தேர்வு செய்து ஊராட்சி தீர்மானம் பெறப்பட்டு இதன் மீது மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நடைமுறையில் இருக்கும் என கண்டமங்கலம் பி.டி.ஓ., மற்றும் ஊராட்சி துணை தலைவருக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

