/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மரத்தில் கார் மோதி பேராசிரியர் பலி
/
மரத்தில் கார் மோதி பேராசிரியர் பலி
ADDED : ஜன 03, 2026 05:10 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் கல்லுாரி பேராசிரியர் இறந்தார்.
திருவண்ணாமலை கரிகாலன் தெருவைச் சேர்ந்தவர் ஏகாம்பரம், 44; தனியார் பொறியியல் கல்லுாரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் ஆங்கில புத்தாண்டையொட்டி திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு ரயிலில் சென்று இரவு 9:00 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தார்.
அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது ஸ்விப்ட் காரை எடுத்துக்கொண்டு திருவண்ணாமலை நோக்கி புறப்பட்டார். 9:30 மணியளவில் திருவண்ணாமலை சாலையில் மங்களபுரம் அருகே சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர புளிய மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே ஏகாம்பரம் இறந்தார்.
அவரது மனைவி மகேஸ்வரி அளித்த புகாரின் பேரில், கெடார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

