/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஏலச்சீட்டு நடத்தி ரூ .10 லட்சம் மோசடி தீயணைப்பு வீரர்கள் மீது புகார்

ADDED : ஏப் 10, 2025 04:33 AM
விழுப்புரம்: ஏலச்சீட்டு நடத்தி ரூ.10 லட்சம் மோசடி செய்த தீயணைப்பு வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பாதிக்கப்பட்டோர் விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
வானுார் அருகே ஐவேலி கிராமத்தை சேர்ந்த தேவநாதன், பார்த்தசாரதி, வாசு, கமலக்கண்ணன் உள்ளிட்டோர் நேற்று விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில்; திண்டிவனம் தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் பணிபுரியும் 3 பேர் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தினர். இவர்களிடம் ஐவேலி கிராமத்தை சேர்ந்த 20 பேர் ஏலச்சீட்டில் சேர்ந்து கடந்த சில ஆண்டுகளாக மாதந்தோறும் பணம் செலுத்தி வந்தோம். இதுவரை ரூ.10 லட்சம் செலுத்தியுள்ளோம். சீட்டு காலம் முடிந்தும் 3 பேரும் எங்களுக்கு தர வேண்டிய பணத்தை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். பலமுறை வற்புறுத்தியும் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வருகின்றனர். மூவர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என தெரிவித்தனர். மனுவை பெற்ற எஸ்.பி., சரவணன், விசாரணை நடத்துவதாக தெரிவித்தார்.