/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

ADDED : ஏப் 10, 2025 04:55 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் கல்வித்துறை சார்பில் நடந்த மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவிகள் குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் குறுமையம் மற்றும் வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகள் நடந்தன.
இதில், ஜூடோ, குத்துச்சண்டை, சிலம்பம், டேக்வாண்டோ போட்டிகளில், மரக்காணம் அரசு மகளிர் உயர்நிலை பள்ளி மாணவிகள் அணியினர் முதலிடம் பிடித்ததுடன், மாநில அளவிலான போட்டியிலும் பங்கேற்று சான்றிதழ் பெற்றனர்.
அவர்களை முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். வெற்றிபெற்ற மாணவிகளை, பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் பாஸ்கரன், உடற்கல்வி ஆசிரியர் அனுசுயாமேரி பாராட்டினர்.