/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காங்., கட்சியினர் பாதை யாத்திரை
/
காங்., கட்சியினர் பாதை யாத்திரை
ADDED : அக் 08, 2024 03:18 AM

கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் நகர காங்., சார்பில் 'நமது இந்தியா; நமக்கான இந்தியா' பாதயாத்திரை நடந்தது.
நிகழ்ச்சிக்கு, கோட்டக்குப்பம் நகர தலைவர் முகமது பாரூக் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர் அகில இந்திய காங்., ராமமூர்த்தி, மாவட்ட பாதயாத்திரை பொறுப்பாளர் பாபு சத்தியமூர்த்தி, காங்., கமிட்டி உறுப்பினர் விஜயரங்கன், வானுார் வட்டார தலைவர் கிருஷ்ணானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.
செஞ்சி
விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்., சார்பில் ஜம்போதியில் இருந்து பாதயாத்திரை துவங்கியது. மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். செஞ்சி வட்டார தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார். விவசாய பிரிவு அன்புசெழியன், திருமலை, ஜெயங்கொண்டான் ஊராட்சி தலைவர் சுப்பிரமணி ஆகியோர் வரவேற்றனர். விக்கிரவாண்டி நகர தலைவர் குமார், வட்டார தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.