நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : செஞ்சி அடுத்த புலிப்பட்டு மதுரா கருவாட்சித்தாங்கல் வீர ஆஞ்சநேயர் கோவில் ஜீர்ணோதாரன மகா கும்பாபிஷேகம் நடந்தது.
அதனையொட்டி கடந்த 14ம் தேதி காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. அன்று மாலை 6:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை நடந்தது.
நேற்று காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், 10:00 மணிக்கு கடம் புறப்பாடாகி, 10:20 மணிக்கு வீர ஆஞ்சநேயர், விநாயகர், முருகன், நாகம், ராகு, கேது சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.