/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சந்தைமேடு புறவழிச்சாலையில் புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் துரிதம்: திண்டிவனம்-சென்னை சாலையில் விபத்தை தடுக்க நகாய் நடவடிக்கை
/
சந்தைமேடு புறவழிச்சாலையில் புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் துரிதம்: திண்டிவனம்-சென்னை சாலையில் விபத்தை தடுக்க நகாய் நடவடிக்கை
சந்தைமேடு புறவழிச்சாலையில் புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் துரிதம்: திண்டிவனம்-சென்னை சாலையில் விபத்தை தடுக்க நகாய் நடவடிக்கை
சந்தைமேடு புறவழிச்சாலையில் புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் துரிதம்: திண்டிவனம்-சென்னை சாலையில் விபத்தை தடுக்க நகாய் நடவடிக்கை
ADDED : டிச 19, 2024 06:57 AM

திண்டிவனம்: திண்டிவனம்-சென்னை சாலையிலுள்ள சலவாதி அருகே போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்தை குறைக்கும் வகையில் புதியதாக மேம்பாலம் கட்டும் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றது.
திண்டிவனம்-சென்னை சாலையில் மட்டும் மூன்று புறவழிச்சாலைகள் உள்ளது. இதில் திண்டிவனம் அருகே சென்னை ரோட்டிலுள்ள சலவாதி கூட்ரோடு அருகே கல்லுாரி புறவழிச்சாலை, திண்டிவனம் கிருஷ்ணகிரி சாலையிலுள்ள சந்தைமேடு புறவழிச்சாலை,திண்டிவனம் ஆர்யாஸ் ஓட்டல் அருகிலுள்ள தீர்த்தக்குளம் புறவழிச்சாலை என மூன்று அமைந்துள்ளது.இதில் சந்தைமேடு புறவழிச்சாலை ஆரம்ப பகுதி, திண்டிவனம்-சென்னை சாலையிலுள்ள சலாவதி அருகே உள்ளது.
இந்த புறவழிச்சாலையில், திருவண்ணாமலையிலிருந்து புதுச்சேரி, விழுப்புரம் மார்க்கமாக வரும் வாகனங்கள் அனைத்தும், சலவாதி கிராமம் அருகே யூ டர்ன் அடித்துதான் திண்டிவனத்தின் உள்ளே வரமுடியும்.
இவ்வாறு யூ டர்ன் அடித்து வாகனங்கள் திரும்பும் போது,சென்னையிலிருந்து திண்டிவனத்திற்கு வரும் வாகனங்கள் மற்றும் திண்டிவனத்திலிந்து சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கின்றது.
இதே போல் சந்தைமேடு புறவழிச்சாலை ஆரம்ப பகுதியில் திண்டிவனத்திலிருந்து திருவண்ணாமலை, வேலுார், செஞ்சி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள் போக்குவரத்து விதியை பின் பற்றாமல், எதிரும், புதிருமாக செல்வதால் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றது.
தொடர் விபத்துக்கள் நடக்கும் இடங்களில் வகையில், தேசிய சாலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், தேசிய நெடுஞ்சாலைத்துறைஆணையம்(நகாய்) ரூ.89 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
இதன் படி திண்டிவனம் அருகே சந்தைமேடு புறவழிச்சாலை ஆரம்ப பகுதியில் புதியதாக மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.இதற்கடுத்து படாளம், உத்திரமேரூர் கூட்ரோடு, மதுராந்கம் என நான்கு இடங்களிலும் பாலம் கட்டப்பட உள்ளது.
இதில் சந்தைமேடு புறவழிச்சாலை ஆரம்ப பகுதியில்அமைக்கப்பட உள்ள மேம்பாலம், திண்டிவனம் அருகே மயிலம் கூட்டேரிப்பட்டில் உள்ளது போல் கட்டப்பட உள்ளது. புதிய மேம்பாலம் கட்டுவதற்காக திண்டிவனம் ஆர்யாஸ் ஓட்டல் எதிரிலுள்ள சென்னை சாலையில், இரண்டு பக்கமும் சர்வீஸ் சாலை போடுவதற்கான பணிகள் கடந்த அக்,,மாதத்தில் ஆரம்பமாகிவிட்டது.
தற்போது சர்வீஸ் சாலை போடுவதற்காக இரு பக்கமும் சாலையை அகல்படுத்தும் பணிநடந்து வருகின்றது. புதிய மேம்பாலம் கட்டும் பணி ஒரு ஆண்டிற்குள் நிறைவு பெற்று விடும் என்று நகாய் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.