ADDED : டிச 01, 2024 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : செஞ்சி நகரில் நேற்று தொடர் மழை காரணமாக, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
செஞ்சி பகுதியில் நேற்று காலை முதல் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது. மாலை 4:00 மணிக்கு பிறகு மழை வலுவடைந்து, சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மாலை 4:30 மணிக்கு பின், பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன. மாலை 6:00 மணிக்கு சாலைகள் வெறிச்சோடின
மழையின் போது திருவண்ணாமலையில் இருந்து செஞ்சி நோக்கி வந்த, இரண்டு கார்கள், செஞ்சி கோட்டை அடுத்த பைபாஸ் சாலையில் நிலை தடுமாறி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தன. இதில் பயணம் செய்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். மழை காரணமாக செஞ்சி சுற்றியுள்ள பல கிராமங்களில் நேற்று காலை முதல் மின் சப்ளை நிறுத்தப்பட்டது.