/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கூட்டுறவு வார விழா கோலப்போட்டி பரிசளிப்பு
/
கூட்டுறவு வார விழா கோலப்போட்டி பரிசளிப்பு
ADDED : நவ 12, 2025 10:36 PM

திண்டிவனம்: திண்டிவனத்தில் கூட்டுறவு வார விழாவையொட்டி, மகளிர்க்கான கோலப்போட்டி நடந்தது.
சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழாவை முன்னிட்டு, விழுப்புரம் மண்டல இணைப்பதிவாளர் விஜயசக்தி உத்தரவின் பேரில் ஒலக்கூர் ஒன்றியம் சார்பில் மகளிர்க்கான கோலப்போட்டிகள், மற்றும் ஆண்களுக்கான ஸ்லோ பைக் ரேஸ் போட்டிகள் நேற்று காலை நடந்தது.
விழாவிற்கு, சரக துணைப்பதிவாளர் ஜீவிதா தலைமை தாங்கினார். கூட்டுறவு சார் பதிவாளர்கள் செந்தில்குமார், விஷ்ணுபிருந்தா,மேகலா முன்னிலை வகித்தனர்.
திண்டிவனம் அரசு கல்லுாரி அருகே நடந்த விழாவில், கோலப்போட்டிகள் மற்றும் ஸ்லோ பைக் ரேசில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் கூட்டுறவு சங்க செயலாளர்கள் அரசு, ரமேஷ், பிரேம்குமார், தங்கராசு, மைதிலி, பத்மாவதி, நகர வங்கி மேலாளர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

