/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
துருவை கிரிக்கெட் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா
/
துருவை கிரிக்கெட் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா
துருவை கிரிக்கெட் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா
துருவை கிரிக்கெட் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா
ADDED : ஜூன் 12, 2025 05:07 AM

வானூர் : துருவை கிரிக்கெட் கிளப் சார்பில், 5ம் ஆண்டு கிரிக்கெட் போட்டிக்கான பரிசளிப்பு விழா நடந்தது.
வானுார் அடுத்த துருவை கிரிக்கெட் கிளப் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் இளைஞர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. 5ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி துருவை மைதானத்தில் கடந்த மாதம் துவங்கியது. துருவை, ஆலங்குப்பம், ஒட்டம்பாளையம், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு உள்ளிட்ட 16 அணிகள் கலந்து கொண்டன.
இதில் ஆலங்குப்பம் அணி முதலிடத்தையும், ஒட்டம்பாளையம் அணி இரண்டாம் இடத்தையும், துருவை அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தன. போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு முதலிடம் பிடித்த அணிக்கு ரூ. 10 ஆயிரம், சுழற்கோப்பையும், இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு ரூ. 8 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பையும், மூன்றாம் இடம் பிடித்த அணிக்கு ரூ. 6 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பையும் வழங்கி பாராட்டினர்.