/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இணையவழி குற்றம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
இணையவழி குற்றம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : மார் 18, 2025 10:53 PM

விழுப்புரம் : விழுப்புரம் தெய்வானை அம்மாள் கல்வியியல் கல்லுாரியில் இணையவழி குற்றம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
முதல்வர் முருகன் தலைமை தாங்கினார். சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, சைபர் குற்றம் என்பது மின்னணு சாதனம், கணினி பயன்படுத்தி ஒருவரின் தரவை திருடுதல், அதிக லாபம், வீட்டிலிருந்து பணி என கூறி ஆன்லைன் மோசடி செய்வோரிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
தொடர்ந்து, சப் இன்ஸ்பெக்டர் ரவிசங்கர், அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து வாட்ஸ் அப் மூலம் வரும் கியூஆர் கோட் ஸ்கேன் செய்வதை தவிர்க்க வேண்டும். மின்சார கட்டணம் கட்டவில்லை என்றும், ஆதார் இணைப்பு போன்ற போலியாக வரும் குறுஞ்செய்திகளில் உள்ள லிங்குகளை கிளிக் செய்ய கூடாது என தெரிவித்தார்.
பின், போலீஸ்காரர் மணிமாறன், சைபர் கிரைம் விழிப்புணர்வு செய்தியை காணொலி மூலம் விளக்கினார். சைபர் குற்றம் மூலம் பாதித்தோர் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதியலாம் என போலீசார் தெரிவித்தனர்.
உதவி பேராசிரியர் அரிசுதன் நன்றி கூறினார்.