ADDED : அக் 08, 2025 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; விழுப்புரத்தில் மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் நாகூர்கனி மகள் காமிலாபானு, 19; இவர், அரசு கல்லுாரியில் பி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் கல்லுாரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை.
இவரது தாய் ஜொகராம்பாள் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.