/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைக் மீது கார் மோதி விபத்து; மனைவி பலி: கணவர் 'அட்மிட்'
/
பைக் மீது கார் மோதி விபத்து; மனைவி பலி: கணவர் 'அட்மிட்'
பைக் மீது கார் மோதி விபத்து; மனைவி பலி: கணவர் 'அட்மிட்'
பைக் மீது கார் மோதி விபத்து; மனைவி பலி: கணவர் 'அட்மிட்'
ADDED : அக் 08, 2025 12:30 AM
திண்டிவனம்; திண்டிவனத்தில் கார் மோதிய விபத்தில் கணவருடன் பைக்கில் சென்ற மனைவி இறந்தார்.
திண்டிவனம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ்சந்த், 63; ஜூவல்லரி உரிமையாளர். இவர் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று காலை தனது மனைவி சரளா, 58; உடன் ஸ்கூட்டரில் திண்டிவனம் - சென்னை, சலவாதி சாலையில் காலை 11:30 மணியளவில் சென்றபோது, சென்னை நோக்கிச் சென்ற சுசுகி டிசையர் கார் ஸ்கூட்டர் பின்னால் மோதியது.
இந்த விபத்தில், சரளா தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். ரமேஷ்சந்த் படுகாயமடைந்தார். உடன் அவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
புகாரின் பேரில், திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.