ADDED : அக் 08, 2025 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அருகே குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
விக்கிரவாண்டி சப் இன்ஸ்பெக்டர்கள் சுந்தர்ராஜ், லியோ சார்லஸ் மற்றும் போலீசார் வ.உ.சி., நகரில் சுதாகர் ,46; என்பவரது கடையில் சோதனை நடத்தினர். அங்கு விற்பனைக்காக குட்கா பாக்கெட்டுகள் வைத் திருந்தது தெரியவந்தது.
உடன், சுதாகர் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, 36 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.