ADDED : அக் 12, 2025 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி அருகே மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.
பெரும்புகை கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகள் துர்கா, 18; செஞ்சி அரசு பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த இரு தினங்களுக்கு முன் மதியம், 12:00 மணியளவில் குடும்பத்தினர் துர்காவை வீட்டில் விட்டு விட்டு விவசாய நிலத்திற்கு சென்று விட்டனர்.
மாலை 4:30 மணிக்கு திரும்பி வந்தபோது அவர் வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாய் வள்ளி செஞ்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து துர்காவை தேடி வருகின்றனர்.