/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அங்காளம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்
/
அங்காளம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்
ADDED : செப் 29, 2025 01:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நவராத்திரி சிறப்பு வழிபாட்டில், அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்திருந்தனர்.
கோவிலில் நவராத்திரி விழா கடந்த 22ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. தினமும் உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வருகின்றனர். இதையொட்டி, சமீபத்தில் ரூபாய் நோட்டுக்களால் மகாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு அம்பாளுக்கு மகா தீபாராதனை நடந்தது.
ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை, தலைமை பூசாரி பரமசிவம், அறங்காவலர்கள் சுரேஷ், மதியழகன், பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.